என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மதுசூதனன் ஆதரவாளர்
நீங்கள் தேடியது "மதுசூதனன் ஆதரவாளர்"
காசிமேட்டில் மதுசூதனனின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். #ADMK
ராயபுரம்:
காசிமேடு மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தபோது மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுசூதனனின் ஆதரவாளரான புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. வட சென்னை மாவட்ட மீனவர் அணி தலைவர் தேசப்பன், நேற்று இரவு சூரியநாராயணன் தெரு வழியாக வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தேசப்பன் காசிமேடு துறைமுக போலீசில் புகார் செய்தார். அதில், ஜெயக்குமாரின் ஆதரவாளர்களான மணிமாறன், சிவக்குமார், பிரகாஷ் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே தேசப்பன் தாக்கியதாக மணிமாறன் போலீசில் புகார் செய்தார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. தேசப்பன் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதை அறிந்ததும் மதுசூதனனின் ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷ மிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர். #ADMK

×

X